தீவிர மயோசிடிஸ் நோயின் தாக்கம்!! சினிமாவுக்கு குட்பை சொல்லி செட்டிலாக போகும் நடிகை சமந்தா..
தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் உருவான Ye Maaya Chesave படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. முதல் படத்திலேயே நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகிய 4 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதற்கு காரணம் நடிகை சமந்தாவின் எல்லைமீறிய நடிப்பு தான் என்று கூறப்பட்டும் வந்தது.
அதனை தொடர்ந்து படங்களில் இதுவரையில்லாத அளவிற்கு கிளாமரில் தாராளம் காட்டி நடித்து வந்தார். விவாகரத்து முடிந்த சில மாதங்களில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தேன் என்று பேட்டிகளில் கூறிவந்தார்.
அதையும் பொருட்படுத்தாமல் படங்களில் நடித்தும் வந்தார். குஷி மற்றும் சிடடெல் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையவிருக்கும் நிலையில் சமந்தா பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பல படங்கள் வரிசைக்கட்டி அவருக்காக நிற்கும் நிலையில், இரு படத்தின் ஷூட்டுக்கு பின் சினிமாவில் இருந்து விலக நடிகை சமந்தா முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள தென் கொரியா நாட்டிற்கு செல்லவிருப்பதாகவும் ஓராண்டுக்கு சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகி உடல் நலம் தேறியப்பின் நடிக்க ஆரம்பிக்கவுள்ளதாகவும் சமந்தா முடிவெடுத்திருக்கிறாராம்.