விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு.. ஆனால்

Samantha Actress
By Kathick Feb 27, 2026 03:30 AM GMT
Report

நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். 4 ஆண்டுகளுக்கு பின் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சமந்தா மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.

விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு.. ஆனால் | Samantha Taken This Dicision After Divorce

அப்படி இருந்தும் சினிமாவில் தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து தன்னால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என நிரூபித்தார். கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொண்டார்.

விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு.. ஆனால் | Samantha Taken This Dicision After Divorce

இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் யாரையும் நம்ப முடியாது என நினைத்தேன். ஆனால் ராஜ் நிதிமோருவின் அக்கறையும் புரிதலும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையை மீண்டும் கொடுத்தது, அவரது நட்பு என் மனதை மெதுவாக ஆற்றியது என கூறியுள்ளார்.

விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு.. ஆனால் | Samantha Taken This Dicision After Divorce

அடுத்து சமந்தா நடிப்பில் தெலுங்கில் தயாராகியுள்ள மா இன்டி பங்காரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.