18 வயதில் முதல் காதலனுக்காக உடலில் டாட்டூ போட்டுக்கொண்ட சமந்தா.. அந்த காதலன் யார் தெரியுமா

Samantha
By Kathick Jul 06, 2025 04:30 AM GMT
Report

ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

18 வயதில் முதல் காதலனுக்காக உடலில் டாட்டூ போட்டுக்கொண்ட சமந்தா.. அந்த காதலன் யார் தெரியுமா | Samantha Talk About Her First Love And Tattoo

அடுத்ததாக பங்காரம் எனும் படத்தை தயாரித்து, கதையின் நாயகியாகவும் சமந்தா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் Rakt Bramhand - The Bloody Kingdom எனும் வெப் தொடரிலும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்தும், அதற்காக போட்டுக்கொண்ட டாட்டூ குறித்தும் பேசினார்.

18 வயதில் முதல் காதலனுக்காக உடலில் டாட்டூ போட்டுக்கொண்ட சமந்தா.. அந்த காதலன் யார் தெரியுமா | Samantha Talk About Her First Love And Tattoo

இதில் "டாட்டூ குத்திக்கொள்வது என்பது என் வழக்கமாக இருந்தது. ஒரு காலத்தில் டாட்டூ போட்டு வந்தேன். எனக்கு 18 வயது இருக்கும்போது ஒருவரை காதலித்தேன். அதுதான் என்னுடைய முதல் காதலாகும். அவரைத்தான் நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என உறுதியாக நம்பியதால், அவருக்காக நான் ஒரு டாட்டூ போட்டுக்கொண்டேன். அந்த காதல் என்னவானது, அந்த டாட்டூ என்னவானது என்பது குறித்தெல்லாம் சொல்ல மாட்டேன்" என கூறியுள்ளார்.