2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத சமந்தா! காரணம் என்ன தெரியுமா

Samantha Actress
By Kathick Jan 26, 2025 04:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தற்போது இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி தொடர்ந்து வெப் தொடர்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ஓரளவு வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சமந்தா அடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து பெரிதாக அறிவிப்பும் எதுவும் வரவில்லை.

2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத சமந்தா! காரணம் என்ன தெரியுமா | Samantha Talk About Why She Avoiding Tamil Movies

இந்த நிலையில், நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் நடித்து 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளனர். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பின் ஏன் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என" என கேட்டனர்.

இதற்கு பதிலளித்த சமந்தா பல படங்களில் நடிப்பது என்பது எளிமையானது. இது எனது கடைசி படம் என என்னை யோசிக்க வைக்கும் அளவுக்கான படங்களில் நடிக்கும் கட்டத்தில் இருக்கிறேன் என நான் நினைக்கிறன்.அப்படியான ஒரு தாக்கத்தில் அந்த படங்கள் தரவேண்டும். இதை நான் 100% சதவீதம் நம்பவில்லை என்றால் நான் அந்த படங்களில் நடிக்கமாட்டேன். நடிகராக எனக்கு சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு மனநிறைவு தராத படங்களை நான் ஒருபோதும் தேர்வு செய்வது கிடையாது" என கூறியுள்ளார்.    

2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத சமந்தா! காரணம் என்ன தெரியுமா | Samantha Talk About Why She Avoiding Tamil Movies