விவாகரத்துக்கு பின் திருமணம் ஆகாத 56 வயது முரட்டு சிங்கிளுடன் இணையும் சமந்தா.. இருவரும் இடையே 21 வயசு வித்தியாசம்
நடிகை சமந்தாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் விவாகரத்து ஆனது. இதன்பின் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சமந்தா, கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆம், தற்போது தமிழ் மட்டுமின்றி ஹிந்தியில் உருவாகும் படங்களில் நடிக்கத்துவங்கியுள்ளார். அதன் முதல்படியாக வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த வரிசையில் தற்போது சல்மான் கான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
35 வயதாகும் சமந்தா 56 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் சல்மான் கானுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தை அனீஸ் பாஸ்மே என்பவர் இயக்குகிறார். சமந்தா மட்டுமின்றி இப்படத்தில் தமன்னாவும் கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.