விவாகர்த்துக்கு பின் சமந்தா பேரில் இருக்கும் சொத்து மதிப்பு! ஜீவனாம்சம் வாங்கி இருக்கலாமே..
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் தெலுங்கு மொழியில் நடித்து மக்கள் மனதை ஈர்த்தவர் நடிகை சமந்தா. சினிமாவை ஆரம்பித்த படத்தின் கதாநாயகனையே வாழ்க்கையின் ஆரம்ப காதலனராகவும் கணவராகவும் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்தார்.
2017 ல் திருமணம் செய்த அவரை 4 வருடம் கழித்து கருத்டு வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் அவரவர் வழியில் சென்று படங்களில் நடித்து வந்தனர். சமீபத்தில் அதே சாக்கு என்று சமந்தா க்ளாமரில் எல்லைமீறிய காட்சியிலும் ஆடையிலும் தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத சமந்தா விவாகர்த்துக்கு பிறகு தாணுண்டு தன் வேலையுண்டு என்று எந்த விமர்சனத்தையும் காதில் போடாமல் இருந்து வருகிறார். தற்போது ஒரு படத்தில் நடிக்க 3 கோடி அளவில் வாங்கும் சமந்தா புஷ்பா ஐட்டம் பாடலுக்காக 5 கோடி ரூபாய் வாங்கியதாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில், சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 80 கோடி ரூபாய் எனவும், அவருக்கு ஹைதராபாத் மற்றும் பல இடங்களில் சொத்துகள் இருக்கிறதாம். மேலும் அவர் மும்பையில் விரைவில் வீடு வாங்கி செட்டில் ஆக போகிறார் எனவும் சொல்லப்படுகிறது.
சமந்தாவுக்கு சொந்தமாக மூன்று சொகுசு கார்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் இரண்டு BMW மற்றும் ஒன்று ஜாக்குவார் கார். மேலும் இன்ஸ்டாகிராமில் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருவதற்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற செய்தி வெளியாகவில்லை.