3 மாதங்களாக காணாமல் போன நடிகை சமந்தா.. இந்த அரியவகை நோய் தான் காரணமா?

Samantha Pushpa: The Rise
3 நாட்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் 2012 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமாகி பின் தமிழில் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா.

காதல் - திருமணம் - விவாகரத்து

இப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களுடனும் நாக சைதன்யா, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, மகேஷ் பாபு போன்ற தெலுங்கு நடிகர்களுடனும் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

சித்தார்த்துடன் காதலில் இருந்து பின் பிரிந்த சமந்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திருமணத்திற்கு பின் சூப்பர் டீலக்ஸ், தி பேமிலி மேன் 2 போன்ற போல்ட்டான படங்களில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

3 மாதங்களாக காணாமல் போன நடிகை சமந்தா.. இந்த அரியவகை நோய் தான் காரணமா? | Samantha Travel To Us Treatment Rare Skin Issues

விவாகரத்துக்கு பின்

இதனால் கணவர் குடும்பத்தினருக்கு நாக சைதன்யாவுக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது. இது போக போக கருத்து வேறுபாட்டாக மாறி விவாகரத்து வரை சென்றது. கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக நாக சைதன்யாவை பிரிவதாகவும் விவாகரத்து பெற்றதாகவும் செய்தி வெளியிட்டார் சமந்தா. விவாகரத்துக்கு பின் புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்டது மூலம் தன்னுடைய மார்க்கெட்டினை 5 கோடியாக ஏற்றினார்.

இதற்கிடையில் போட்டோஷூட் என்று ரசிகர்களை மயக்கி வந்த சமந்தா கடந்த 3 மாதங்களாக சமுகவலைத்தங்களில் ஆக்டிவாக இருப்பதை நிறுத்திவிட்டார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், சமந்தாவிற்கு தோல் சம்மந்தப்பட்ட ஒரு அரிய வகை நோயால பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

3 மாதங்களாக காணாமல் போன நடிகை சமந்தா.. இந்த அரியவகை நோய் தான் காரணமா? | Samantha Travel To Us Treatment Rare Skin Issues

சமந்தாவுக்கு என்ன ஆச்சு

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சகுந்தலம், யசோதா, குஷி போன்ற படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தோலில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய அமெரிக்கா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து சமந்தா தரப்பில் இது போன்ற வதந்தி செய்திகளை நம்பவேண்டாம் என்றும் சமந்தா நலமாக தான் இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர். வெறும் அமெரிக்கா பயணத்தில் மட்டுமே இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.