இயக்குநருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா சமந்தா! வெளிநாட்டிற்கு சென்றுள்ள ஜோடியின் புகைப்படம்

Samantha
By Kathick Jul 09, 2025 03:30 AM GMT
Report

நாகசைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடுமையான போராட்டத்திற்கு பின் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார்.

பாலிவுட்டில் சமந்தா தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். அதற்கு காரணம் தி பேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல் வெப் தொடர்கள். இந்த வெப் தொடர்களை ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இயக்கியிருந்தனர்.

இயக்குநருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா சமந்தா! வெளிநாட்டிற்கு சென்றுள்ள ஜோடியின் புகைப்படம் | Samantha With Raj Nidimoru Latest Photo Viral

இதில் இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை சமந்தா காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், ஆனால் அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் சமந்தா இயக்குநர் ராஜ் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், கிசுகிசுக்கப்படும் காதலருடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ள சமந்தா, அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க..

GalleryGalleryGalleryGalleryGalleryGallery