மாங்கு மாங்குன்னு ஒர்கவுட் செய்யும் சமந்தா.. காரணம் இதுதானா? வைரல் வீடியோ

Samantha Trending Videos Indian Actress
By Bhavya Jan 17, 2025 08:30 AM GMT
Report

நடிகை சமந்தா

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக அவர் உடல் எடை குறைந்து ஒல்லியாகி இருந்தது பல விமர்சனங்களை சந்தித்தது.

இதனால் அவர் பாடி ஷேமிங் செய்யப்பட்டார். ஆனால், அவ்வாறு செய்தவர்களுக்கு சமந்தா ஏற்கனவே நெத்தியடி பதில் கொடுத்து இருந்தார்.

அதாவது அவர் anti-inflammatory டயட் சாப்பிடுவதாகவும். அதனால் உடல் எடை ஏறாது என்றும், மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு இது தேவை என்றும் சமந்தா கூறி இருந்தார்.

காரணம் இதுதானா? 

இந்நிலையில், சமந்தா தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். புத்தாண்டு resolution ஆக ஒர்கவுட் செய்வதை எடுத்து இருந்தாராம்.

மாங்கு மாங்குன்னு ஒர்கவுட் செய்யும் சமந்தா.. காரணம் இதுதானா? வைரல் வீடியோ | Samantha Workout Video Goes Viral

இரண்டு வாரங்களாக அதை கடைபிடிக்க முடியாத நிலையில் தற்போது, ஒர்கவுட் செய்ய தொடங்கி இருப்பதாக வீடியோ ஒன்றை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு அதில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.