வெளியில் தலைக்காட்டாத பாக்யராஜ் மகள் சரண்யா!! ஒரேவொரு கேள்வியால் ஷாக்கான பூர்ணிமா..

Bhagyaraj Poornima Bhagyaraj Zee Tamil Saranya Bhagyaraj
By Edward Sep 05, 2025 02:30 PM GMT
Report

சரண்யா பாக்யராஜ்

பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகள் சரண்யா பாக்யராஜ், சில காலமாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இதனையடுத்து தனக்கு குழந்தை பிறந்ததாகவும் குழந்தையை பார்த்துக்கொள்வது கடினம் என்றும் கூறி பேட்டிக் கொடுத்தார்.

காதல் தோல்வியால் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். தற்போது ஆடை அணிகலன்கல் தொடர்பான ஆன்லைன் ஷாப்பிங் பணியை செய்து வருகிறார்.

[வெளியில் தலைக்காட்டாத பாக்யராஜ் மகள் சரண்யா!! ஒரேவொரு கேள்வியால் ஷாக்கான பூர்ணிமா.. | Samayal Express Season 2 Saranya Bhayaraj Mother

சமையல் எக்ஸ்பிரஸ்

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை சுஜிதா மற்றும் ஷோயா இணைந்து பங்கேற்று வரும் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அம்மா பூர்ணிமாவுடம் சேர்ந்து கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது பூர்ணிமாவிடம் உங்களுக்கு காதல் திருமணமா. அரேஞ்ச் மேரேஜா என்று கேட்டனர். அதற்கு பூர்ணிமா எனக்கு அரேஜ்ச் மேரேஜ் தான், திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து தான் ஹனிமூன் சென்றோம் என்று கூறியிருக்கிறார்.

அப்போ அந்த ஹனிமூனுக்கு பின் தான் சரண்யா பிறந்தாங்களா என்று ஹோயா கலாய்த்ததும் பூர்ணிமாவும் சரண்யாவும் வெட்கப்பட்டு சிரித்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.