வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டியின் குழந்தைகளா இது? வைரலாகும் புகைப்படம்..
suriya
sameerareddy
tamilactress
asal
vaaranamaayiram
By Edward
தமிழ் சினிமாவில் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன் இயக்கி நடிகர் சூர்யா நடித்து பெரியளவில் ஹிட் அடித்த படம் வாரணம் ஆயிரம். அப்படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்து தமிழில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி.
இந்தி படங்களில் அறிமுகமாகி பின் தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு, நடிகர் அஜித்தின் அசல், விஷாலின் வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து அக்ஷைய் வர்தா என்பவரை 2014ல் திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார்.
சமீபத்தில் இரண்டாம் குழந்தை பிறக்கும் முன் கர்ப்பகாலத்தில் போட்டோஹூட் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தற்போது இரு குழந்தைகள் வளர்ந்து சமீரா ரெட்டியை மிஞ்சும் அழகில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.