சொந்தமாக வீடியோ கேம் வைத்திருந்த முதல் இந்திய நடிகை இவர் தான்!! யார் தெரியுமா?
சமீரா ரெட்டி
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை சமீரா ரெட்டி. ரேஸ், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட ஹிட் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை சமீரா ரெட்டிக்கு கொடுத்தது.
திரைப்பயணத்தை தாண்டி ஒரு வீடியோ கேமில் மையக் கதாபாத்திரமாக தோன்றியது சமீரா ரெட்டிக்கு உலகளவில் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
வீடியோ கேம்
2006 சமீரா: வாரியர் பிரின்ஸஸ் என்ற வீடியோ கேம் சமீரா ரெட்டியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வெளியானது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதம் முழு நீல வீடியோ கேம்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதில் சமீராவின் கதாபாத்திரம் ஒரு வீரமங்கையாக சித்தரிக்கப்பட்டு சாகசம், ஆக்ஷன் உள்ள கதைக்களத்தில் இடம்பெற்றது. மொபைல் மற்றும் பிற கேமிங் தளங்களில் வெளியான இந்த கேம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதுகுறித்து சமீரா கூறுகையில் என் கதாபாத்திரத்தை ஒரு வீடியோ கேமில் பார்ப்பது மறக்க முடியாத ஒரு அனுபவம். இந்தியாவில் இதுபோன்ற புதிய முயற்சியில் நான் பங்கேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தாதாக சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.