இதுதேவையா? விஜே அர்ச்சனாவை கலாய்த்து ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான நடிகை சனம்!

archana biggboss sanamshetty
By Edward May 22, 2021 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர் விஜே அர்ச்சனா. பிரபல தொலைக்காட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சேனலில் இருந்து வெளியேறி கடந்த ஆண்டு ஆரம்பித்த பிக்பாஸ் 4 சீசனில் வைல்ட்கார்ட் மூலம் உள்ளே சென்றார்.

பிக்பாஸில் அவருக்கென்று ரசிகர்கள் இருந்தாலும் பெரும் வெறுப்பை சம்பாத்தார். நிகழ்ச்சி பிறகு அதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இடையில் தன் மகளுடன் சேர்ந்து யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் பாத்ரூம் டூர் என்ற நிகழ்ச்சியை எடுத்து வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். பலர் இதுபற்றி விமர்சித்து வந்த நிலையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சனம் செட்டி பங்கமாக கலாய்த்துள்ளார்.

இந்த நாட்டுல 1008 பிரச்சனை, உங்க பாத்ரூம் பிரச்சனையை வெச்சுகோங்கமா வீட்டுல என்று டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சனம் செட்டிக்கு ஆதரவாக அர்ச்சனாவை கலாய்த்தும், சிலர் சனம் செட்டியை கேலி கிண்டல் செய்து விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிக்பாஸ் 4 சீசனில் சனம் செட்டியும் அர்ச்சனாவும் இரு பிரிவுகளில் இருந்து சண்டை போட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.