வாய்ப்பு கொடுப்பதாக கூறி, விஜய்க்கு தெரியாது.. கொந்தளித்த சனம் ஷெட்டி
சனம் ஷெட்டி
ஒரு மாடலாக இருந்து பின் 2012ம் ஆண்டு ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இணைந்து இயக்கிய அம்புலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி.
இப்படத்தை தொடர்ந்து சினிமா கம்பெனி, ராவு, மாயை போன்ற பல சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தார். தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார்.
திரையுலகில் 10 வருடங்களுக்கு மேலாக இருந்தும் பெரிய இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. இடையில் அதாவது 2016ம் ஆண்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றார்.
சனம் ஷெட்டி ஓபன்
இந்நிலையில், சனம் ஜனநாயகன் படத்தின் உதவி இயக்குநர் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "ஜனநாயகன் படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் உதவி இயக்குநர் ஒருவரிடம் அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன். அவரும் எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி 6 மாதமாக என்னை அலைக்கழித்து வருகிறார்.
எப்போதுமே மார்க்கெட் வேல்யூ இருக்கும் நடிகைகளுக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள். அப்படி வேல்யூ இல்லாத நடிகைகளை அலையவிடுகிறார்கள். இந்த விஷயம் கண்டிப்பாக தளபதி விஜய்க்கு தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.