கடத்தப்பட்ட தனம்.. கையெழுத்து போட்ட கதிர், ரகுராம் செய்யப்போவது என்ன? - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். நேற்றைய எபிசோடில் புவனேஸ்வரி தனத்தை கடத்தி அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம் வாங்க.
அதாவது, கடத்தப்பட்ட தனத்தை ஒரு ஃப்ரீசர் ரூமுக்குள் அடைத்து வைக்கிறார்கள். அதன்பிறகு புவனேஸ்வரி, மாயாவுக்கு வீடியோ கால் செய்து, தனம் தன்னிடம் இருப்பதாக சொல்கிறாள். மேலும், கதிர்தான் ஜீவா என்ற உண்மையை ஒப்புக்கொண்டு கதிர் சில ஆவணங்களில் கையெழுத்து போட வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாள்.
இதை கேட்ட மாயா உடனே கதிரை சந்தித்து விஷயத்தை சொல்ல, தனத்தை காப்பாத்தணும் என்பதற்காக எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட தயார் என்று கதிர் சொல்கிறான். இதையடுத்து இருவரும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் புவனேஸ்வரியை சந்திக்க கிளம்புகிறார்கள்.
மறுபக்கம், தனம் அடைக்கப்பட்டிருக்கும் ஃப்ரீசர் ரூமுக்குள் வரும் ரவுடி தனது செல்போனை தவறவிட்டு செல்கிறான். அந்த போன் தனத்தின் கையில் கிடைக்க, உடனே சீனுவுக்கு போன் செய்கிறாள். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த அழைப்பை மணி எடுக்கிறார். தனம் தான் கடத்தப்பட்டிருப்பதை சொல்ல, மணி உடனே இந்த விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் தெரிவிக்கிறார்.
இதனால் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். தனத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று ஒவ்வொரு ஏரியாவாக கரண்டை கட் செய்து, தனம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

இதற்கிடையில் கதிரும் மாயாவும் புவனேஸ்வரியை சந்திக்கிறார்கள். புவனேஸ்வரி கொடுத்த ஆவணங்களில் கதிர் கையெழுத்து போடுகிறான். ஆனால் தனம் இருக்கும் இடத்தை மட்டும் சொல்லாமல் புவனேஸ்வரி தொடர்ந்து நக்கல் அடிக்கிறாள். இதனால் கடுப்பாகும் மாயா, "இவங்க சொல்லப் போற மாதிரி தெரியல, நாமளே தனத்தை தேடலாம்" என்று கதிருடன் அங்கிருந்து கிளம்புகிறாள்.
மறுபக்கம், கடும் குளிரில் ஃப்ரீசர் ரூமுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் தனம், கையில் இருக்கும் செயினை பார்த்து கண்கலங்குகிறாள். "நீதான் ஜீவா என்ற உண்மை ரகுராமுக்கு தெரியணும். அவர் தொலைச்ச தங்கை பையன் நீதான் என்பதை அவர் தெரிஞ்சுக்கணும். நான் இல்லாம போனாலும் நீ சந்தோஷமா இருக்கணும்" என்று மனதிற்குள் நினைத்து உருகுகிறாள்.

இப்படியான நிலையில் தனத்தை குடும்பத்தினர் காப்பாற்றுவார்களா? கதிர் போட்ட கையெழுத்தால் என்ன பிரச்சனை வரப்போகிறது? ரகுராம் அடுத்ததாக என்ன செய்யப் போகிறார்? என்பதை தெரிந்துகொள்ள சந்தியா ராகம் சீரியலை இன்று இரவு 10 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.