மச்சினிச்சி சிந்தியாவுடன் இப்படியொரு குத்தாட்டம்! குஷியில் சாண்டி மாஸ்டர்
நடன இயக்குனர் கலா மாஸ்டர் தொகுத்து வழங்கிய மானாட மயிலாடா நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கோரியோகிராஃப் செய்து பிரபலமானவர் சாண்டி. அதன்பின் கலா மாஸ்டருக்கு உதவி நடன இயக்குனராக பணியாற்றி தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் கோரியோகிராஃபர் இடத்தினை பிடித்துள்ளார்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குரு நாதா குரூப் மூலம் மக்கள் மனதை ஈர்த்து இரண்டாம் இடத்தினை பெற்றார். இதையடுத்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வரும் சாண்டி மாஸ்டர் சென்னையில் நடன பள்ளியை நடத்தி வருகிறார்.
அங்கு அவரது மனைவியின் தங்கை சிந்தியா வினோலினும் பங்கு பெற்று வருகிறார். அவ்வப்போது சாண்டி மாஸ்டருடன் குத்தாட்டம் போட்ட வீடியோவையும் வெளியிட்டு வரும் சிந்தியா ஆர் ஆர் ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.