திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு பின் கணவரை பிரிகிறாரா நடிகை சங்கீதா?இதுதான் காரணமா

Sangeetha Divorce Actress Gossip Lanka Krish
By Edward Aug 06, 2025 10:30 AM GMT
Report

நடிகை சங்கீதா

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. பின்னணி பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தன்னைவிட கணவருக்கு சிறிய வயது என்று செய்திகள் வெளியான நிலையில், என்னைவிட கிரிஷ் தான் வயதில் மூத்தவர் என்று கூறினார். இந்நிலையில் சங்கீதாவை சுற்றி புதிய சர்ச்சை தற்போது ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு பின் கணவரை பிரிகிறாரா நடிகை சங்கீதா?இதுதான் காரணமா | Sangeeta Is Reportedly Planning To Divorce

விவாகரத்து 

அதாவது சங்கீதாவுக்கும் கணவர் கிரிஷுக்கும் சில மாதங்களாகவே மனஸ்தாபம் இருப்பதாகவும் அந்த மனஸ்தாபம் குடும்பத்திற்குள் இருந்து எழுந்திருக்கலாம், அவர் தனது கணவர் கிரிஷ்ஷை பிரியப்போவதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கிறது.

தன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பெயரை சங்கீதா கிரிஷ் என்பதை Sangeetha Act என்று மாற்றியிருக்கிறார். அப்படி அவர் மாற்றியதால் தான் இருவருக்கும் விவாகரத்து என்ற பேச்சுக்கள் எழ ஆரம்பித்துள்ளது. அதேபோல் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் எதையும் அவர் நீக்கவில்லை என்பதால் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என தெரியாமல் இருக்கிறது.

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் சமூகவலைத்தளத்தில் பரவி வருவதைத்தான் பகிர்ந்திருக்கிறோமே தவிர, இந்த தகவலுக்கும் விடுப்பு தளத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.