விவாகரத்து வழக்கு..விஜய்யிடம் மன்னிப்பு கேட்டாரா சங்கீதா!! திடீர் வாபஸ் வாங்கியது ஏன்?
விஜய்-சங்கீதா
பிரபலங்களின் திருமண செய்திகளும், விவாகரத்து செய்திகளும் அதிகம் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலத்தின் விவாகரத்து செய்திகளில் ஒன்று தான் விஜய்-சங்கீதா பிரிவு. இவர்கள் இருவரின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்த செய்தி கடந்த வருடம் வெளியாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஷாக் ஆனார்கள்.

நேற்று ஆகஸ்ட் 7 தேதி விஜய்-சங்கீதாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது. விஜய் சட்டசபையில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை, ஆனால் வீடியோ காலில் சங்கீதா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
விசாரணையில் சங்கீதா விவாகரத்து வழக்கு உட்பட 3 வழக்குகளை வாபஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்குகள் முடிவுக்கு வந்தது.

விஜய்யிடம் மன்னிப்பு
இந்நிலையில் விஜய்க்கு எதிராக வழக்கு தொடர்ந்த சங்கீதா, தனது கணவருக்கு எதிராக தவறான வழக்குகளை தொடுத்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், அந்த வழக்கை நேரில் பார்த்ததாக பெண் வழக்கறிஞர் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
லண்டனில் இருக்கும் சங்கீதா சென்னைக்கு வந்து மீண்டும் விஜய்யுடன் வாழ்வாரா? குழந்தைகளின் எதிர்காலம் கருதி சங்கீதா முடிவெடுப்பாரா? அல்லது விஜய் - சங்கீதா இருவரும் விரைவில் மியூச்சுவல் டைவர்ஸ் செய்யப்போகிறார்களா என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது.
கோர்ட்டில் தளபதி விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் இன்று நடந்ததை நேரில் பார்த்த வக்கீல் pic.twitter.com/VxengscJf1
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) August 7, 2026