நடிகர் விஜய்யின் மாமனார், மாமியார் இவர்கள் தான்.. விவாகரத்து சர்ச்சைக்கு பின் வெளிவந்த புகைப்படம்
விஜய் - சங்கீதா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் சங்கீதா தனது கணவர் விஜய்யை விட்டு பிரிந்து சென்றதாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தார்.
சங்கீதா தனது தந்தையின் வீட்டில் கேனடாவில் சில நாட்கள் இருந்தாராம். இந்த சர்ச்சை வெளிவந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை.
மனைவி சங்கீதாவை சமாதானம் செய்து தன் வீட்டிற்கு விஜய் அழைத்து வந்துவிட்டார் என கூறப்படுகிறது. சமீபத்தில் கூட பிரம்மாண்ட இயக்குனரின் மகள் திருமணத்தில் சங்கீதா தனது மகனுடன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விஜய்யின் மாமனார் மற்றும் மாமியாரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை பலரும் சங்கீதா விஜய்யின் அப்பா, அம்மாவை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தற்போது அவர்களுடைய புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..