எப்போது ஹீரோயினாக நடிப்பீங்க? 3 படங்களில் தங்கையாக நடிக்கும் வாரிசு நடிகையால் ஏங்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்து பின் வயது முதிர்ச்சியால் அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் நடிப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். அந்தவகையில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து தேசிய விருது பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்திய படங்களில் கதாநாயகியாக நடித்த கீர்த்தி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு முன் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு சினிமா ஒன்றில் சிறப்பு கதாபாத்திரத்தில் பள்ளி சிறுமியாக நடித்துப்பார்.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாணிக்காயிதம் படத்தில் ஒரு செண்டிமெண்ட் காட்சி ஒன்றில் கிளிசரின் இல்லாமலேயே கண்களில் கண்ணீரை வரவழைத்து கீர்த்தி சுரேஷ் நடித்ததாக தகவல் கசிந்துள்ளது.
இந்த காட்சி திரையில் பார்க்கும்போது ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி என கூறுகிறார்கள். அதெல்லாம் சரிதான்.
முன்னணி நடிகையாக இருக்கும் சமயத்தில் இவ்வாறு தொடர்ந்து மூன்று படங்களில் தங்கையாக நடித்தால் இவரது மார்க்கெட் குறைந்து விடாதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.