கூட்டத்தில் அத்துமீறி சீண்டிய ரசிகர்.. கோபத்தில் பளார் விட்ட நடிகை சானியா.. வைரல் வீடியோ..
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நிவின் பாலி நடிப்பில் சாட்டர்டே நைட் என்ற படம் விரைவில் திரையில் வரவிருக்கிறது. இப்படத்தின் பிரமோஷனுக்காக கோழிக்கூட்டில் இருக்கும் பிரபல மால் ஒன்றில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்காக அப்படத்தின் கதாநாயகி சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோரும் கலந்து கொண்டனர். மாலி ஏராளமான ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்ஸ்சர்கள் கஷ்டப்பட்டனர்.
இதற்கிடையில் சானியா ஐயப்பன் கூட்டத்திற்குள் சிக்கியதால் ரசிகர் ஒருவர் நடிகை கிரேஸ் ஆண்டனியிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். பாலியல் ரீதியாக அத்துமீறிய நபரை நோக்கி கோபத்தில் திரும்பி சானியா அந்த நபரை பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சானியா ஐயப்பன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
உங்கள் பாசத்திற்கு நன்றி. சக நடிகையை கூட்டத்தில் ஒருவர் அத்துமீறினார். அதேபோல் என்னிடமும் நடந்து கொண்டார்கள்.
அவரால் எதிர்வினை ஆற்றமுடியவில்லை என்பதால் நான் அப்படி நடந்து கொண்டேன். இதுபோல் சம்பவம் யாருக்கும் நடக்கூடாது என்ற பதிவினையும் பகிர்ந்துள்ளார்.
#Malayalam actresses #SaniyaIyappan, #GraceAntony sexually #harassed during #filmpromotions
— Free Press Journal (@fpjindia) September 28, 2022
The incident took place when the two #actresses were promoting their upcoming film '#SaturdayNight' at the Hilite mall in #Kozhikode.https://t.co/OO6SgSmlK5#MalayalamActress #Shocking pic.twitter.com/OvBFiAsuz5


