மாட்டுனது போதைபொருள் வழக்கு! அம்மன் ரோல் கேக்குதா! விமர்சிக்கும் ரசிகர்கள்...
சமீபகாலமாக இந்திய சினிமா பிரபங்கள் தவறான பாதையில் சென்று சிக்கி வருகிறார்கள். அதிலும் முன்னணி நடிகர் நடிகைகள் வீக்கெண்ட் பார்ட்டி என்ற பெயரில் மது மற்றும் போதை பொருள் அருந்தும் கலாச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.
சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு பிறகு பிரபலங்கள் பலர் அதிலும் பாலிவுட் பிரபலங்கள் பலர் இதில் சம்பந்த்ப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தனிப்படை வைத்து தேடி வந்தனர். அதில் சுஷாந்த் காதலியில் ஆரம்பித்து, பல நடிகர் நடிகைகளிடம் விசாரணை மேற்கொண்டு வந்தது. அதில் முன்னணி கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி உடபட பல நடிகைகள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது சிறையில் இருந்து வெளியேறி மீண்டும் படங்களில் கவனம் செலுத்து வரும் சஞ்சனா கல்ராணி சமீபத்தில் அவரது இணையதள பக்கத்தில் அம்மன் வேஷமிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் மாட்டுனது போதைபொருள் கேஷ், இதுல அம்மன் அவதாரமா என கிண்டலடித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ದೇವಿ ಅವತಾರದಲ್ಲಿ ಸಂಜನಾ ....@sanjjanagalrani #Navaratri #Photoshoot pic.twitter.com/BnthEiYJpY
— Saraswathi Jagirdar ?? (@saraswathi1717) October 6, 2021