தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆளாக ஒருநாள் வருவான்.. விஜய் மகன் குறித்து பேசிய சஞ்சீவ்
நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் தற்போது சினிமாவிலிருந்து நடிப்பதை நிறுத்திவிட்டு முழுமையாக அரசியலில் களமிறங்கியுள்ளார்.
விஜய்யின் மகன் தற்போது சினிமாவில் அறிமுகமாகி இருப்பதை அனைவரும் அறிவோம். ஆனால், நடிகராக அல்லாமல், இயக்குநராக களமிறங்கியிருக்கிறார். ஜேசன் சஞ்சய் தற்போது சிக்மா என்கிற படத்தை இயக்க சந்தீப் கிஷன் அதில் ஹீரோவாக நடித்துள்ளார். படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், சஞ்சய் குறித்து விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
இதில் "விஜய் ஆரம்பத்தில் சினிமாவிற்குள் வரும்போது எனக்கு நன்றாக தெரியும் பெரிய ஹீரோவா வருவான் என்று. அதே போல்தான் தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் குறும்படங்களை நான் பார்த்து இருக்கிறேன். விஜய் போலவே அவனும் தமிழக மக்கள் கிட்ட பெரிய பெயரை சம்பாதிப்பான் பாருங்க. விஜய் போல் அவருடைய மகனும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆளாக கண்டிப்பாக ஒருநாள் வருவான்" என கூறியுள்ளார்.
