வீட்டுக்குள்ள வராத..அப்படியே கிளம்புடா!! விஜய்யை வாசலோடு திருப்பி அனுப்பிய நண்பன்
விஜய் - சஞ்சீவ்
நடிகர் விஜய்யின் நெருங்கிய நடிகரும் நடிகருமான சஞ்சீவ், கொரானா காலக்கட்டத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய சம்பவம் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
கொரானா காலத்தில் எனக்கு காய்ச்சல் வந்தது. கொரானாவாக இருக்கும் என்று பயத்தில் எல்லோரையும் என் மனைவி வீட்டுக்கு அனுப்பி வைத்த்விட்டேன்.
அப்போது விஜய் எனக்கு கால் செய்து, என்ன ஆச்சு, காய்ச்சலான்னு கேட்டு டெஸ்ட் எடுத்துட்டியான்னு கேட்டான். நானும் நாளைக்கு தான் எடுக்கணும் என்று சொன்னேன்.
சாப்பிட்டியான்னு கேட்டதற்கு இல்லன்னு சொன்னேன். அடுத்த 15 நிமிடத்தில் கால் பண்ணி வீட்டுக்கு கீழ சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தான். அப்போ அவன் தான் என்னை பார்த்துக்கிட்டான்.
வீட்டிற்குள் வராத, செக்யூரிட்டி கிட்ட கொடுத்துவிட்டு கிளம்பி போடா வீட்டுக்கு என்று சொன்னேன். அவனுக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்படுமோ என்ற பயத்தில் அனுப்பி வைத்ததாக சஞ்சீவ் பகிர்ந்துள்ளார்.