விஜய் மனைவி சங்கீதா இங்க தான் இருக்காங்க..வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்..
விஜய் - சங்கீதா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாக தொடர்ந்து பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது.
விஜய் தனது படங்களின் இசை வெளியிட்டு விழாவிற்கு தனது மனைவியை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், மாஸ்டர் படத்திற்கு பின் இருவரும் ஒன்றாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை என்பதால், பிரிவு குறித்து சர்ச்சை பரவியது.
சஞ்சீவ்
இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தன் மனைவி ப்ரீத்தியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விஜய் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், விஜய் வீட்டிற்கு நானும் என் நண்பர்களும் செல்வோம். அப்போது சங்கீதா தான் எங்களுக்கு சமைத்து கொடுப்பார்கள்.
விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். விஜய் தன் குடும்பத்தை வெளி உலகத்திற்கு அதிகம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை, அவ்வளவு தான் என்று சஞ்சீவ் பேசியுள்ளார். இதன்மூலம், விஜய் - சங்கீதா பிரிந்ததாக வெளியாகும் வதந்திகளுக்கு சஞ்சீவ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.