விவாகரத்துக்கு இதுதான் காரணமா? வதந்திகளை உடைத்தெரிந்த நடிகை சமந்தா!

samantha divorce nagachaitanya tamilactress
By Edward Oct 08, 2021 09:25 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடி போட்டு நடித்து அறிமுகமாகினார். பின் அவரையே 10 வருடங்களாக காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். பின் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பல வதந்திகள் வெளியாகி அதிகாரப்பூர்வமாக விவாகரத்தினை அறிவித்தனர்.

இந்நிலையில் விவாகரத்து செய்தி வெளியான பின் கடந்த 6 ஆம்தேதி அவர்களின் திருமணநாளன்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு டிரெண்ட்டாக்கினார் தற்போது விவாகரத்து கொடுத்த சில கஷ்டங்களை பகிர்ந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். தன்னை பற்றிய விவாகரத்து வதந்திகள் பல உருவானது. அதிலிருந்து பாதுகாத்தவர்களுக்கு நன்றி. அதிலும் குழந்தையில்லை, கருக்கலைப்பு, வேறொருவருடன் தொடர்பு என பல வதந்திகள் பரவியது.

வலி மிகுந்தது விவாகரத்து. அதிலிருந்து மீள நேரம் கொடுங்கள். என்னை பற்றிய வதந்திகள் இடைவிடாமல் வந்துகொண்டிருக்கும். உறுதியாக கூறுகிறேன் அவர்கள் கூறுவது ஒருபோதும் என்னை உடைக்காது என உருக்கமாக கூறியுள்ளார்.

விவாகரத்துக்கு இதுதான் காரணமா? வதந்திகளை உடைத்தெரிந்த நடிகை சமந்தா! | Santha Emotional Letter Fot