நயன்தாரா - விக்னேஷ் சிவன் மகன்களின் தாய்மாமா இந்த நடிகர் தான்!! சந்தானம் கொடுத்த வாக்கு..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணத்திற்கு பின் சில பிரச்சனைகளை சந்தித்து வந்த நயன் - விக்கி தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர்.
இரு குழந்தைகளையும் சிறப்பாக வளர்த்து வரும் நிலையில், நடிகர் சந்தானம் நயன்தாராவை பற்றி சில விசயத்தை பேசியிருக்கிறார். டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வந்துள்ளார்.
அதில், வல்லவன் படத்தில் இருந்தே நயன்தாரா தனக்கு பழக்கம் என்பதால் எனக்கு கிடைத்த தங்கை என்று கூறியுள்ளார். விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து இயக்கவிருந்த படத்தில் தான் முக்கிய ரோலில் இருந்ததாகவும் அதற்காக விருந்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களது குழந்தைகளுக்கு என் மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் என்றும் நான் தாய் மாமன் சீர் செய்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும், ராஜா ராணி மாதிரியான ஒரு கதையை கூறினால் நாம் நடிக்கலாம் என்று நயன்தாரா தன்னிடம் கூறியதாகவும் சந்தானம் தெரிவித்திருக்கிறார்.