இங்க நான் தான் கிங்கு.. சந்தானத்து-க்கு கவினால் சரியான சங்கு தான்!! காத்து வாங்கும் தியேட்டர்..

Santhanam Kavin Gossip Today Star Movie Inga naan thaan kingu
By Edward May 19, 2024 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தவர் நடிகர் சந்தானம். காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகிறது.

இங்க நான் தான் கிங்கு.. சந்தானத்து-க்கு கவினால் சரியான சங்கு தான்!! காத்து வாங்கும் தியேட்டர்.. | Santhanam Inganaanthaankingu Boxoffice Kavin Star

அந்தவகையில் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் படுமோசமான தோல்விக்கு அடுத்து ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் இங்க நான் தான் கிங்கு படத்தில் நடித்திருந்தார்.

சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தில் பிரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், முனிஷ்காந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வெளியானது. முதல் நாளில் வெறும் 2.13 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.

இங்க நான் தான் கிங்கு.. சந்தானத்து-க்கு கவினால் சரியான சங்கு தான்!! காத்து வாங்கும் தியேட்டர்.. | Santhanam Inganaanthaankingu Boxoffice Kavin Star

சந்தானத்தின் சம்பளமே இப்படத்தில் 10 கோடி என்று கூறப்படும் நிலையில் படத்தின் வசூல் 5 கோடியை தாண்டுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஸ்டார் படம் இதுவரை 15 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.