ஆணவத்தின் உச்சியில் ஆடும் சந்தானம்! வளர்த்த கெடா இப்படியுமா செய்யும்!

santhanam comedyactorr lollusaba thillukkuthuttu rambala
By Edward Feb 28, 2022 05:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்ற பெயரை பெற்று அனைத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் சந்தானம். பெரிய நடிகர்களாக இருந்தாலும் சரி டைமிங் காமெடியை தற்போதைய கால கட்டத்திற்கு சந்தானத்தை அடித்துக்கொள்ள யாரும் இல்லை.

அந்த அளவிற்கு காமெடி நடிகர்களில் டாப் இடத்தில் இருந்த சந்தானம் ஹீரோவாக கால் பதித்து வருகிறார். அப்படி முதல் கதாநாயகன் படமான அமைந்தது ராம் பாலா இயக்கிய தில்லுக்கு துட்டு படம் தான். லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியை சந்தானத்தை ராம் பாலா தான் அறிமுகப்படுத்தினார்.

அதேபோல் சினிமாவில் அவர் தான் அறிமுகப்படுத்தினார். அதற்கு விசுவாசமாக இருந்த சந்தானம் அவர் இயக்கிய தில்லுக்கு துட்டி இரு பாகமும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் திருப்தி கொடுத்தது. இந்நிலையில் இப்படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கலாம் என்று சந்தானத்திடம் ராம்பாலா கூறியுள்ளாராம்.

ஆனால் சந்தானம் தற்போதைக்கு வேண்டாம் என்று கூறிவிட்டாராம். கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்ததும் ஆணவத்தில் ஆடி வருகிறார் சந்தானம் என்ற பேச்சுக்களும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.