முரட்டு குத்து, சந்தானம் பட நாயகிக்கு கொரானா வைரஸ்! ஷாக்காகும் ரசிகர்கள்..
இந்தியாவில் கொரானா வைரஸின் தாக்கம் ஒரு வருடம் முடிந்தும் தற்போது அதிகரித்து வருகிறது. குறைந்த எண்ணிக்கையில் பரவி வந்த வைரஸ் தற்போது அதன் தாக்கம் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்தை தாண்டி பரவி வருகிறது. இதற்கு சமீபகாலமாக பல இந்திய பிரபலங்களுக்கு பாசிட்டிங் ஆகியுள்ளது. சில தினங்களுக்கு முன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு வைரஸ் தொற்று பாசிட்டிவாகியுள்ளது. இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து, சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படங்களில் நடித்த நடிகை வைபவி சந்தில்யாவிற்கு கொரானா வைரஸ் பாசிட்டி என்று வந்துள்ளதாம்.
நேற்றியதினம் ஹோலி பண்டிகையை கொண்டாடியதை அடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொரானா வைரஸ் வந்துள்ளதாகவும். தனது அப்பா, அம்மாவுக்கும் கொரானா வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் வீடியோ ஸ்டோரிஸில் கூறியுள்ளார்.
