பாக்யராஜ் மகன் பிட்டு பட நடிகரா? பிரபல நடிகரால் வம்பில் மாட்டிய வாரிசு..
சமீபகாலங்களாக திரைப்படங்களுக்கு விமர்சனம் கொடுக்கிறோம் என்று கூறி திரைப்படத்தையும் அதில் நடிக்கும் கலைஞர்களின் உடலை பற்றியும் ஒருசில கேவளமாக விமர்சித்து பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அப்படி சமீபத்தில் வலிமை, பீஸ்ட், அண்ணாத்த, மாறன் போன்ற படங்களுக்கு ப்ளு சட்டை மாறனின் விமர்சனங்கள் எல்லைமீறிய வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்து வந்தது சினிமா நட்சத்திரங்கள் கண்டனத்தை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பிக்பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரி அர்ஜுனன் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதை நடிகர் ஆரி அர்ஜுனன் ஒரு மேடையில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஒரு தியேட்டர் உரிமையாளர் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் படத்தின் வசூல் பற்றி பேசும் வீடியோவை பார்த்தேன். ஒரு படத்தை பற்றி உயர்வாகவும் மற்றொரு படத்தை பற்றி தாழ்வாகவும் அவர் பேசி இருந்தார்.
இது மிகவும் வருத்தமான விஷயம். ஒரு படத்தைப் பற்றி நீங்கள் செய்யும் தவறான விமர்சனம் ஒட்டுமொத்த படக்குழுவின் உழைப்பையும் மட்டம் தட்டுவதற்கு சமம் என்று ஆதங்கத்துடன் பேசியிருந்தார். இதற்கு பலரும் ஆதரவாக பேசியும் இணையத்தில் ஆரி பேசிய வீடியோவையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இதற்கு பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தரமான செருப்படி என்று கூறி கருத்தினை பதிவிட்டிருந்தார்.
இதை ப்ளூ சட்டை மாறன், பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களை 'தரமான செருப்படி' என்று மறைமுகமாக கிண்டல் செய்த 'முருங்கைக்காய் சிப்ஸ்' பிட்டுப்பட நடிகர். பதிலடி தந்த சினிமா ரசிகர்கள் என குறிப்பிட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதற்கு பலர் கிண்டலாக ப்ளு சட்டை மாறனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களை 'தரமான செருப்படி' என்று மறைமுகமாக கிண்டல் செய்த 'முருங்கைக்காய் சிப்ஸ்' பிட்டுப்பட நடிகர். பதிலடி தந்த சினிமா ரசிகர்கள். pic.twitter.com/1Z0QyV544S
— Blue Sattai Maran (@tamiltalkies) April 19, 2022