நம்ம குட்டி சாரா அர்ஜுனா இது.. 17 வயதில் பொன்னியின் செல்வன் படத்தில் ஹீரோயின் ஆயிட்டாங்களே..

Aishwarya Rai Ponniyin Selvan: I Mani Ratnam
By Edward Sep 07, 2022 09:45 AM GMT
Report

குட்டி நட்சத்திரங்கள் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி நடிகர் சியான் விக்ரம், அனுஷ்கா செட்டி, அமலா பால், சந்தானம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் நடித்து அசத்தியவர் சாரா அர்ஜுன்.

வட இந்திய குட்டி நட்சத்திரமாக சினிமா பற்றி தெரிந்த பெற்றோர்களால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில் அப்படத்தின் இயக்குனரின் ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் லீட் ரோலில் நடிக்க வைத்தார்.

அதன்பின் இந்தி, மலையாளம் படங்களில் நடித்து வந்த சாரா அர்ஜுன் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்துள்ளார்.

குட்டி குழந்தையாக இருந்த சாரா அர்ஜுன் தற்போது வளர்ந்து 17 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்துள்ளார்.

நேற்று வெளியான பொன்னியின் செல்வன் டிரைலரின் அவரின் காட்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. அழகாக காணப்படும் ஐஸ்வர்யாவுக்கு நிகரான அழகில் 17 வயதான சாரா அர்ஜுன் நடித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

தெய்வத்திருமகள் சாராவா என்று பலர் ஷாக்காகி கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery