தன்னை விட 20 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் சாரா அர்ஜுன்.. வீடியோ இதோ
விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் சாரா அர்ஜுன். இதன்பின் சைவன், சில்லு கருப்பட்டி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
தமிழ் சினிமாவை விட இவருக்கு பாலிவுட்டில் பல பட வாய்ப்புகள் குவிந்த. இந்த நிலையில், 20 வயதாகியுள்ள சாரா அர்ஜுன் Dhurandhar எனும் ஹிந்தி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் 40 வயதாகும் முன்னணி நடிகை ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் First லுக் வீடியோவை படக்குழு வெளியிட்டனர். இந்த வீடியோவில் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன.
இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக, நெட்டிசன்கள் இதனை விமர்சித்து வருகிறார்கள். 40 வயது நடிகருக்கு 20 வயது பெண்ணை ஜோடியாக நடிக்க வைப்பதாக என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.