புதிய தொழிலை தொடங்கிய சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்..
சச்சின் மகள் சாரா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் பல தொழில்களை ஆரம்பித்து வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிட்டராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
கம் அண்ட் சே ஜி’டே என்ற பிரச்சாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. 130 மில்லியன் டாலர்கள்(ரூ.1140 கோடி) மதிப்புமிக்க இந்த விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டிருந்தார்.
பைலேட்ஸ் அகாடமி
இந்நிலையில் சாரா டெண்டுல்கர் புதிதாக உடற்பயிற்சி நிலையத்தை தொடங்கியுள்ளார். துபாய்யை மையமாகக்கொண்ட பைலேட்ஸ் அகாடமி என்ற பெயரில் புதியை கிளையை மும்பையில் அந்தேரி பகுதியில் தொடங்கியிருக்கிறார்.
சமீபத்தில் அந்த அகாடமியின் கிராண்ட் லான்ச் நிகழ்ச்சி நடந்துள்ளது. நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.
சாரா டெண்டுல்கர் ஊட்டச்சத்து நிபுணராக இருந்தும் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறையியல் பயின்றிருக்கிறார்.
இதனால் பைலேட்ஸ் என்ற மனம் மற்றும் உடலை ஒருங்கிணைக்கும் உடற்பயிற்சி முறை நிறுவனத்தை தான் தற்போது ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

