தம்பி திருமணத்தில் மின்னிய சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்!! அவர் அணிந்த நெக்லஸ் எவ்வள்வு தெரியும்..
அர்ஜுன் - சான்யா
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச்சென்றனர்.

திருமணத்தில் மணமக்களைவிட அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்தான் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர். இரவு விருந்தின்போது சாரா, விலையுயர்ந்த நெக்லஸில் ஆழகாக வந்து கவனத்தை ஈர்த்தார். இளஞ்சிவப்பு நிற சேலையில், அதற்கேற்றவாறு ரோஜா இளஞ்சிவப்பு நிற ரசிக்கையுடன் தோற்றமளித்தார்.
சாரா டெண்டுல்கர் நெக்லஸ்
சாரா கழுத்தில் அணிந்த மீனாகரி நகைகள் தான் தற்போது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. சுனிதா ஷெகாவத் சேகரிப்பை சேர்ந்ததுதான் அந்த மீனகாரி நெக்லஸ்.

பிரபல நகை வியாபாரி பியான்ஷ் கோயலின் கூற்றுப்படி சாரா டெண்டுல்கர் அணிந்த நெக்லஸின் விலை சுமார் ரூ. 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை இருக்கும் என்றும் பாரம்பரிய குந்தன் போல்கிகள் மற்றும் மலர் அலங்காரங்களுடன் மின்னும் இந்த நெக்லஸை உருவாக்க குறைந்தது 360 மணிநேரம் ஆனதாகவும் கூறப்படுகிறது. கொலம்பிய மரகதங்கள், தென் கடல் முத்துக்கள், வைரங்களுடன் செய்யப்பட்டதாக சுனிதா ஷெகாவத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.






