சச்சின் மகனுக்கு திருமணம்!! தம்பி காதலுக்கு தூதுவாக இருந்த சாரா டெண்டுல்கர்..
அர்ஜுனுக்கும் சானியாவுக்கும் காதல்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் ரெண்டுல்கர், தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக் என்பவரை வரும் மார்ச் 5 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார்.
திருமணத்திற்கான வேலைகளை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், குடும்பத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கும் திருமண அழைப்பிதழை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அர்ஜுனுக்கும் சானியாவுக்கும் எப்படி காதல் மலந்தது? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அர்ஜுனுடன் காதல் தொடங்கும் முன்பே சச்சின் குடும்பத்துடன் சானியா நெருக்கமாக இருந்துள்ளார். ஏனென்றால் சச்சினின் மகள் சாராவும் சானியாவும் நெருங்கிய தோழிகள்.

பல வருடங்ளாக இருவரும் தோழிகளாக இருந்து லண்டன், கென்யா என்ற பல பயணங்களில் ஒன்றாகவே இருந்துள்ளனர். இந்த நட்பின்போது தான் அர்ஜுனுக்கும் சான்யாவுக்கும் காதல் மலந்துள்ளது. சச்சின் வீட்டு நிகழ்ச்சிகளிலும் சானியா சாராவுடன் பங்கேற்றுள்ளார். சச்சின் மற்றும் சானியாவின் தாத்தா தாத்தா ரவி காயும் நண்பர்கள். ரவி காய், கிராவிஸ் குழுமத்தின் தலைவர்.

தூதுவாக இருந்த சாரா
இரு குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகள் நட்பு நீடித்தும் வந்துள்ளது. அக்கா சாரா மூலம் சானியாவுக்கு ஏற்பட்ட அர்ஜுனின் நட்பு காதலாக மாறியுள்ளது. அர்ஜுன் காதலுக்கு சாரா டெண்டுல்கர் தூதுவாக செயல்பட்டுள்ளார். பின் இருவரின் காதல் இரு குடும்பத்தினருக்கும் தெரியவர, காதலுக்கு உடனடியாக பச்சைக்கொடியும் காட்டியிருக்கிறார்கள்.
தற்போது மும்பையில் பிரமாண்ட திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் முதல் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் வரை அர்ஜுன் - சானியா திருமணத்தில் பங்கேற்கவுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.