ஓவர் பில்டப் ஆகாதுமா! இந்த சீரியல்-க்கும் வந்துட்டியா அம்மணி நீ!!
பிரபல தொலைக்காட்சி சேனலில் நெஞ்சல் மறப்பதில்லை சீரியல் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சரண்யா துரட்டி. சீரியலில் நல்ல வரவேற்பு பெற்று வந்த சரணயா ஒருசில படங்களில் செய்தி வாசிப்பாளராகவும் சிறு கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
அதன்பின் ஆயுத எழுத்து சீரியலில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஒரே ஆண்டிலேயே சீரியல் நிறுத்தப்பட்டது. அதன்பின் வைதேகி வந்தால் என்ற சீரியல் கடந்த ஆண்டு ஆரம்பமானது. துவங்கி ஒருசில எபிசோட் செல்லும் போதே டிஆர்பியில் அடிவாங்கியதால் நிறுத்தப்பட்டது.
இதனால் மனம் உடைந்த நடிகை சரண்யா உருகி வீடியோவை வெளியிட்டார். தற்போது யூடியூப் சேனல் ஆரம்பித்து சமுக கருத்துக்களை கலந்துரையாடி வருகிறார்.
இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் போலிஸ் அதிகாரியாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இங்கயும் வந்திட்டீயாமா நீ என்று கலாய்த்து வருகிறார்கள்.