காதல் சர்ச்சையில் சிக்கிய சம்பவம்! சரத்குமார் இப்படி மாற இந்த நடிகை தான் காரணம்?

jeyalalitha sarathkumar radhika vijayakanth bayilvan
By Edward Jul 26, 2021 04:33 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 80களில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தயாரிப்பாளராகவும், வில்லனாகவும் அறிமுகமாகி பின் கதாநாயகனாக ஜொலித்தவர் நடிகர் சரத்குமார். கோடிஸ்வர குடும்பத்தில் இருந்து வந்த சரத்குமார் ஆரம்பத்தில் விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் வில்லனாக நடித்து வந்தார்.

இதையடுத்து பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி மாட்டிக்கொண்டிருந்ததால் மார்க்கெட்டை இழந்து வந்தார். அதன்பின் நடிகர் சரத்குமாரை மாற்றியவர் நடிகை ராதிகா தான் என்று நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார் சமீபத்தில்ய பேட்டியொன்றில். விஜயகாந்த வாழ்க்கை படங்களில் ராதிகா நடித்ததால் கேப்டன் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து ராதிகா சரத்குமார் படங்களில் நடிக்க ஆரம்பித்தபின் அவரின் வாழ்க்கை மாறியும் காதல் சர்ச்சைகள் இல்லாமலும் இருந்து வந்தார்.

மேலும் நடிகை ஜெயலலிதாவை பற்றி பாராட்டி பேசிய பின் சில சமயம் திட்டியும் மாற்றி பேசினார். அதை நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான் ஏன் என்று கேட்டேன். நான் தனியாக கூறுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அது என்ன காரணம் என்று சரத்குமார் கூறியதை குறிப்பிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் பயில்வான்.

வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்க..