மகனையே முகம் சுளிக்க வைத்த சரத்குமார்! நடிகையுடன் அப்படி நடித்தது தான் காரணம்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். கமர்ஷியல் படத்திற்கேற்ற வகையில் அவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய ஹிட். நாட்டாமை, சூரிய வம்சம் போன்ற படங்கள் சரத்குமார் வாழ்க்கையையே மாற்றியது.
இதேபோல் அய்யா படமும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதையடுத்து அவரது மார்க்கெட் சிறிய நடிகர்களின் வரவால் குறைய ஆரம்பித்தது. அதனை தக்க வைக்க நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடிகை நமீதாவுடன் ஏய் படத்தில் நடித்திருப்பார்.
அப்படத்தில் அர்ஜுனா அர்ஜுனா பாடல் பட்டித்தொட்டியெங்கும் பரவி பெரியளவில் பேசப்பட்டது. நமீதாவுடன் அவர் ஆடிய ஆட்டத்தை அவரது மகன் பார்த்து முகம் சுளித்து சேனலை மாற்றியதாகவும் இப்படியான காட்சியில் நடிக்க வேண்டாம் என்று கூறி திட்டியும் இருகிறார் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சரத்குமார் கூறியுள்ளார்.