மகள் வரலட்சுமியின் திருமணம்!! பிரம்மாண்டத்தின் உச்சிக்கே சென்று மாஸ் காட்டப்போகும் சரத்குமார்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சரத்குமார் தம் மகள் வரலட்சுமியை நடிகையாக அறிமுகப்படுத்தி டாப் இடத்தினை பிடிக்க வைத்தார். தற்போது வரலட்சுமி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் முக்கிய இடத்தினை பிடித்து வருகிறார் 39 வயதை எட்டிய வரலட்சுமி, சில நடிகர்களுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார்.
சிலமாதங்களுக்கு முன் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் நொக்கோலாய் என்பவரை சாதாரண முறையில் மகள் வரலட்சுமிக்கு நிச்சயம் செய்து வைத்தார் சரத்குமார். விமர்சனங்களை எல்லாம் அசால்டாக தட்டிவிட்டு வந்த வரலட்சுமி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விரைவில் இருவருக்கும் திருமணம் என்ற செய்தியும் கசிந்தது. திருமணத்தை தமிழகத்தில் நடத்தாமல் டெஸ்டினேசன் வெட்டிங்-ஆக நடத்த தம்பதிகள் முடிவு செய்திருக்கிறார்கள். அதாவது தாய்லாந்தில் வரும் ஜூலை 2ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாம்.
நிச்சயத்தை போல திருமணத்திலும் இரு வீட்டினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்களாம். இதற்கு முன் தாஜ் ஹோட்டலில் மெஹந்தி நிகழ்வையும் வரவேற்பு நிகழ்ச்சியை சென்னை லீலா பேலஸிலும் நடத்த சரத்குமார் திட்டமிட்டிருக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.