வரலட்சுமி கல்யாணத்துக்கு இத்தனை கோடி செலவு செய்தாரா சரத்குமார்.. அம்மாடியோ
Varalaxmi Sarathkumar
R. Sarathkumar
By Yathrika
சரத்குமார்
தமிழ் சினிமாவில் அர்ஜுன்-தம்பி ராமைய்யா வீடு திருமணம் முடிந்த கையோடு இன்னொரு பிரபலத்தின் திருமண விசேஷம் கோலாகலமாக நடந்தது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் என்பவருடன் கோலாகலமாக அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் இந்த திருமண கொண்டாட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
இந்த நிலையில் சரத்குமார், வரலட்சுமி திருமணத்திற்கு ரூ. 800 கோடி செலவு செய்ததாக ஒரு யூடியூப் பக்கத்தில் தகவல் வந்தது.
இதுகுறித்து சரத்குமார், ரூ. 800 கோடியா அது எங்கு இருக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை என கூறி இருக்கிறார்.
அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 200 முதல் ரூ. 300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.