ராதிகா-வுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தாரா சரத்குமார்.. உண்மையான காரணமே இந்த நடிகை தான்!!
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் சும்ரீம் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் சரத்குமார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் இருந்தார்.
சாயா தேவி விவாகரத்து
சரத்குமாரின் ஆரம்பகாலக்கட்ட சினிமா வாழ்க்கையில் காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர். 1984ல் சாயா தேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சரத்குமார் இரு மகள்களை பெற்றார். அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக சாயா தேவியை விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அவருடன் விவாகரத்தான அடுத்த ஆண்டே நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி சாயாதேவியை விவாகரத்து செய்ய நடிகை ராதிகா தான் காரணம் என்று பல ஊடகங்களில் கிசுகிசு செய்திகளை பரப்பியது. ஆனால் ராதிகா அதற்கு காரணமில்லையாம், டாப் நடிகை ஒருவர்தான் காரணமாக இருந்தாராம்.
நடிகைகளுடன் சரத்குமார்
சாயா தேவியை திருமணம் செய்திருந்து வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில் ஒருசில நடிகைகளுடன் சரத்குமார் நெருக்கமாக இருந்து வந்தாராம். அப்படி 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை நக்மாவுடனும் நெருக்கமாக இருந்துள்ளார் சரத்குமார். இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் கூட இருந்தாராம்.
இதனால் தான் சாயா தேவியை 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தாராம். ஆனால் அந்த காதல் நீடிக்காமல் ஒரே வருடத்தில் முடிய சரத்குமாரின் வாழ்க்கையை அப்படியே மாற்றிய ராதிகாவை திருமணம் செய்திருக்கிறார்.