சரிகமப லிட்டில் சாப்ஸ் S4 & DJD மகா சங்கமம்!! சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?

Sarathkumar Sneha Mirchi Shiva Dance Jodi Dance Saregamapa Lil Champs
By Edward Apr 19, 2025 02:30 AM GMT
Report

Saregamapa Lil Champs S4 & DJD

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ்.

இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த வாரம் OLD is GOLD சுற்று நடைபெற்றது.

சரிகமப லிட்டில் சாப்ஸ் S4 & DJD மகா சங்கமம்!! சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா? | Saregamapa 4 Djd Reloaded 3 Mahasangamam Promo

இதேபோல், சினேகா, வரலட்சுமி, பாபா பாஸ்கர் இணைந்து நடுவர்களாக பணியாற்றி ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோட் 3 நிகழ்ச்சி.

இந்த வாரம் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியும் DJD Reloaded 3 நிகழ்ச்சியும் இணைந்து மகா சங்கமம் நடைபெற்றுள்ளது.

மகா சங்கமம்

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரலட்சுமியின் கணவர் மற்றும் அவரது அப்பாவும் நடிகருமான சரத்குமார், மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் பிரமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.