சரிகமப பவித்ராவுக்கு அடுத்தடுத்து வரும் ஜாக்பாட்!! என்ன தெரியுமா?

Zee Tamil Tamil Singers Saregamapa Lil Champs Saregamapa Seniors Season 5
By Edward Jan 06, 2026 07:00 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி தான் சரிகமப. தற்போது சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 தொடங்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

சரிகமப பவித்ராவுக்கு அடுத்தடுத்து வரும் ஜாக்பாட்!! என்ன தெரியுமா? | Saregamapa 5 Fame Pavithra Got New 20 Lakh House

சரிகமப பவித்ரா

இந்நிகழ்ச்சி முன் சரிகமப சீசன் 5ல் பங்கேற்ற பவித்ரா பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டாப் 5 இடத்தினை பிடித்து, மக்கள் ஃபேவரேட் இடத்தினை பிடித்தார் பவித்ரா.

இந்நிலையில், கணவரை இழந்து மகளை வளர்த்து வரும் பவித்ராவிற்கு பிரபல Terrenum Homes நிறுவனர் ஆனந்த் ரவிச்சந்திரன், ஒரு பிளாட்டை பரிசாக வழங்கியிருக்கிறார்.

20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாட்டை பவித்ராவிற்கு வழங்கு ஷாக் கொடுத்துள்ளார். இதனை வாங்கிய பவித்ரா கண்ணீருடன் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தயாரிக்கும் ஒரு படத்தில் இரு பாடல்களை பாட வைக்கவும் இருப்பதாக கூறியிருக்கிறார்.

சரிகமப பவித்ராவுக்கு அடுத்தடுத்து வரும் ஜாக்பாட்!! என்ன தெரியுமா? | Saregamapa 5 Fame Pavithra Got New 20 Lakh House

இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். ஏற்கனவே இசையமைப்பாளர் டி இமான் இசையில் பாடும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் பவித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.