சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! மெய்சிலிர்க்க வைக்கும் இறுதி சுற்று போட்டியாளர்கள்..

Zee Tamil Tamil Singers Saindhavi Saregamapa Lil Champs
By Edward May 04, 2025 04:30 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ், அபினேஷ் என 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த வாரம் 6வது இறுதி சுற்று போட்டியாளருக்கான தேர்வு நடந்துள்ளது. அதில் பெரும்பாலும் மஹாதி தான் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வாரம் சனிக்கிழமை எபிசோட்டில், இறுதி சுற்று போட்டியாளர்களான திவினேஷ் மற்றும் யோகஸ்ரீ பாடி அசத்தியுள்ளனர்.