சரிகமப லிட்டில் சாப்ஸ் 4!! முதியோர் இல்லத்திற்கே உயிர் கொடுக்கும் திவினேஷ்..

Tamil TV Shows Archana Chandhoke Saindhavi Saregamapa Lil Champs
By Edward Apr 15, 2025 07:30 AM GMT
Report

சரிகமப லிட்டில் சாப்ஸ் 4

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

சரிகமப லிட்டில் சாப்ஸ் 4!! முதியோர் இல்லத்திற்கே உயிர் கொடுக்கும் திவினேஷ்.. | Saregamapa Lil Champs Season 4 Divinesh Video

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

திவினேஷ்

கடந்த வாரம் OLD is GOLD சுற்று நடைபெற்றுள்ளது. இந்த ரவுண்ட்டில் போட்டியாளர்கள் சிறப்பாக அசத்தியிருக்கிறார்கள். அதில் திவினேஷ் தன்னுடைய ஸ்டைலிஷ் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

சரிகமப லிட்டில் சாப்ஸ் 4!! முதியோர் இல்லத்திற்கே உயிர் கொடுக்கும் திவினேஷ்.. | Saregamapa Lil Champs Season 4 Divinesh Video

மேலும் திவினேஷ் பாடுவதை பார்த்து முதியோர் இல்லத்தில் இருக்கும் 40க்கும் மேற்பட்ட முதியவர்கள் நிகழ்ச்சிக்கு வந்து திவினேஷை பாராட்டி நெகிழ வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் செய்த செயல்கள் நடுவர்கள் உள்ளிட்ட பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.