சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! திவினேஷ் அப்பாவின் கனவை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்..

Sivakarthikeyan Zee Tamil Archana Chandhoke Saregamapa Lil Champs Divinesh
By Edward May 13, 2025 07:30 AM GMT
Report

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்த நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாம்ஸ் 4. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் 6 பேர் இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டனர். ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி உள்ளிட்ட 6 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தயாராகினர்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! திவினேஷ் அப்பாவின் கனவை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. | Saregamapa Little Winner Divinesh Fulfills Dream

திவினேஷ்

மே 11 ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து நேரு ஸ்டேடியத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறுதி சுற்றுப்போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். சிறப்பாக பாடி அசத்திய திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னராக சிவகார்த்திகேயனால் அறிவிக்கப்பட்டார்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale!! டைட்டில் வின்னர் திவினேஷுக்கு கிடைத்த பட்டம்..

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale!! டைட்டில் வின்னர் திவினேஷுக்கு கிடைத்த பட்டம்..

அரசு பள்ளியில் படுத்த திவினேஷ் தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னரானார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் பெரிய நிறுவனம் திவினேஷின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டது. பலர் அவருக்கு பரிசுகளை கொடுத்தனர்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! திவினேஷ் அப்பாவின் கனவை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. | Saregamapa Little Winner Divinesh Fulfills Dream

ஸ்ரீநிவாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் திவினேஷ் தன் அப்பாவுக்கு வண்டி ஒன்று வாங்கித்தர வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறியிருந்தார். அதற்கு பாடகர் ஸ்ரீநிவாஸும், அதற்கு எவ்வளவு ஆகும், முன்பணமாக முதலில் நான் 30 ஆயிரம் கொடுக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! திவினேஷ் அப்பாவின் கனவை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. | Saregamapa Little Winner Divinesh Fulfills Dream

தற்போது கிராண்ட் பினாலே முடிந்தப்பின் பாடகர் ஸ்ரீநிவாஸ் திவினேஷ் மற்றும் அர்ச்சனா இருவரும் திவினேஷ் வீட்டிற்கு சர்ப்ரைஸாக சென்று, வாங்கிய வண்டியின் சாவி மற்றும் புத்தகங்கள் முழுவதையும் வண்டியோடு சேர்த்து திவினேஷின் அப்பாவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தை அந்த ஊர் முழுக்க நின்று வியந்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.

Gallery