சரிகமப சீனியர் 5!! நடுவரையே எழவைத்த ஈழத்தமிழன் சபேசன்...

Zee Tamil Tamil Singers Saregamapa Seniors Season 5
By Edward Nov 01, 2025 08:30 AM GMT
Report

சரிகமப சீனியர் 5

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நடைபெற்று வருகிறது. கடந்த 5 வாரங்களாக டிக்கெட்டு பினாலேவுக்கான போட்டிகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே, சிறப்பாக பாடி அசத்திய சுஷாந்திகா, சரிகமப சீனியர் சீசன் 5ன் முதல் இறுதி சுற்றுப்போட்டியாளராகவும், 2வது ஃபைனலிஸ்ட்டாக ஸ்ரீஹரி இடம்பிடித்தார். இதனைதொடர்ந்து 3வது இறுதி சுற்றுப்போட்டியாளருக்காக Folk ரவுண்ட் இந்த வாரம் நடைபெற்றுள்ளது.

சரிகமப சீனியர் 5!! நடுவரையே எழவைத்த ஈழத்தமிழன் சபேசன்... | Saregamapa Senior S5 Folk Round Sabesan Sing

சபேசன்

அப்போது, ஈழத்தமிழரான சபேசன், பாடகர் கார்த்திக் பாடிய உசுரே போகுது உசுரே போகுது என்ற பாடலை பாடியிருக்கிறார். சிறப்பாக பாடிய சபேசனை, நடுவர்கள் பாராட்டிய நிலையில் அப்பாடலை பாடிய கார்த்திக் எழுந்து நின்று கைத்தட்டியும் அவரிடம் சென்று அந்த பாடலை பாடியிருக்கிறார்.

மேலும் சபேசன் தான் 3வது இறுதிசுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.