சரிகமப சீனியர் 5!! கண் இழந்த தம்பியை நினைத்து உருகிய போட்டியாளர் பகவதி.. வீடியோ..

Zee Tamil Archana Chandhoke Saregamapa Seniors Season 5
By Edward Jul 08, 2025 10:30 AM GMT
Report

சரிகமப சீனியர் சீசன் 5

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிப்பரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் பகவதி.

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த பகவதி, தன்னுடைய தம்பிக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்த போது தீடீரென நிகழ்ச்சிக்கு தம்பி ஐய்யனார் வந்து அண்ணனுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

சரிகமப சீனியர் 5!! கண் இழந்த தம்பியை நினைத்து உருகிய போட்டியாளர் பகவதி.. வீடியோ.. | Saregamapa Seniors S5 Bagavathi Emotional Video

இதனால் எமோஷனலான பகவதி தம்பி நடந்த சம்பவத்தை பகிர்ந்து அனைவரையும் கண்ணீர் மல்க அழ வைத்திருக்கிறார்.

பகவதி தம்பி ஐய்யனார்

அதில், சின்ன வயதில் நாம் கம்பு சிற்றிக்கொண்டிருந்த போது என் தம்பி ஐய்யனார் குறுக்கே வந்துவிட்டான். அதனால் அவனுக்கு கண்ணில் பாதிப்பு அடைந்துவிட்டது. அவன் என்னிடம் அண்ணா, என் கண்ணு மட்டும் சரி பண்ணிக்கொடு, எல்லாரும் கேலி பண்றாங்க என்று அழுவான்.

சரிகமப சீனியர் 5!! கண் இழந்த தம்பியை நினைத்து உருகிய போட்டியாளர் பகவதி.. வீடியோ.. | Saregamapa Seniors S5 Bagavathi Emotional Video

அவனுக்கு என்னால் தான் அப்படி ஆச்சுன்னு தெரியும். இருந்தாலும் என் மீது பாசமாக இருப்பான். ஆவனுக்கு அண்ணன் என்றால் உயிர். என் ஆசை எல்லாம் என் தம்பிக்கு பார்வை கிடைக்கணும், அவ்வளவு தான், வேற எதுவும் வேண்டாம் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் பகவதி.

மருத்துவரிடம் கேட்டபோது, சென்னையில் போகச்சொன்னார்கள். அம்மாவுக்கு தெரியாது, எனக்கு கல்லூரி போகணும் அப்போது கூட்டிட்டு போகமுடியாத சூழல்.

இதனை தொடர்ந்து பாடகர் விஜய் பிரகாஷ், சரிகமப குழு இதை பார்த்துக்கொள்ளும், கண்டிப்பாக நடக்கும் என்று கூறியது, பகவதி கண்ணீர் விட்டு அழுதுள்ளது அரங்கினரையே உருகவைத்திருக்கிறது.