சரிகமப சீனியர் சீசன் 5ல் நடிகை தேவயானி மகள் இனியா!! இப்படியொரு திறமையா..
சரிகமப சீனியர் சீசன் 5
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப.
சமீபத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.
இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த எபிசோட்டில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர்.
தேவயானி மகள் இனியா
இந்நிலையில் நடிகை தேவயானியின் மகள் இனியா சரிகமப சீனியர் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த மேடை எல்லோருக்கும் கிடைக்காது, சொந்த முயற்சியில் மேலே வரணும் என்று தான் என்னோட ஆசை என்று தேவயானி அதற்கான காரணத்தை கூறி நெகிழ வைத்திருக்கிறார்.